நெல்லை.ஏப்.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை. என்.கணேசராஜா தலைமை தாங்கினார். அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாவட்டப் பொருளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சௌந்தரராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பூத் கமிட்டி அமைக்கும்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் வேண்டுகோளுக்கு ஏற்ப முறையாகவும், முழுமையாகவும் அமைக்க வேண்டும் எனவும், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் ஆங்காங்கே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நெல்லை மாநகரச் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி வே.நாராயணன், கல்லூர் வேலாயுதம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நாராயண பெருமாள், திசையன்குளம் பேரூராட்சித் தலைவி ஜான்சிராணி, செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளருமான அம்மா எஸ்.செல்வகுமார், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.முத்துக்குட்டி பாண்டியன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி மகபூப்ஜான், மாவட்ட பிரதிநிதி மேலப்பாளையம் பி.ஷேக் பீர், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் எச்.ஸ்ரீதர்ராஜன், 55ஆவது வட்டச் செயலாளர் புதியமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதிச் செயலாளர் சிந்து முருகன் நன்றி கூறினார்.