பேராசிரியர். மருத்துவர் விஜயலட்சுமி ஞானசேகரன் எழுதிய , நவீனமித்ரா பப்ளிகேஷன்ஸ் பதிப்பித்த ‘மகளிரும் மகப்பேறும் பாகம் 1’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு அன்று அண்ணாநகரில் உள்ள ஃபார்ம்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் மருத்துவர் வி. சொக்கலிங்கம் அவர்கள் பங்கேற்று நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். மருத்துவர். எஸ்.கீதாலஷ்மி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். மேலும், இந்நிகழ்வில் நவீனமித்ரா பப்ளிகேஷன்ஸின் தலைவர் திரு. ஞானசேகரன் மற்றும் துறைசார்ந்த பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்று இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.