காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, திருமுருகன் நகரில் உள்ள அன்னை அறக்கட்டளை மையத்தில் அன்னை அறக்கட்டளை மற்றும் மாதா மருத்துவக் கல்லூரி இணைந்து அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.அன்னை அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் டி.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்ற முதல் இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கண் பார்வை குறைபாடு உள்ள பயனாளிகளுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய அன்னை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதுஇதில் தன்னார்வலர்கள் மோகன், பாண்டியன், தணிகாசலம், கிருபானந்தம், அருள்மொழி, கார்த்திகேயன் மற்றும் அன்னை அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.