கோவை : உத்கர்ஷ் சிறு நிதி வங்கி லிமிடெட் (உத்கர்ஷ் எஸ்.எஃப்.பி.எல்) தனது புதிய வங்கிக் கிளை திறப்பு விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. கோயம்புத்தூர் துடியலூரில் வசிப்பவர்களுக்கு உள்ளடங்கிய நிதி வசதிகளை மேம்படுத்துவதற்கும் அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வழங்குவதற்கும் வங்கி கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த விரிவாக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அறிமுகத்தின் மூலம், நாடு முழுவதும் 1,043 வங்கி கிளைகளையும், தமிழ்நாட்டில் 15 வங்கி கிளைகளையும் உத்கர்ஷ் வங்கி கொண்டுள்ளது.
புதிய விரிவாக்கம் குறித்து, உத்கர்ஷ் சிறு நிதி வங்கியின் எம்.டி. & சி.இ.ஓ., திரு. கோவிந்த் சிங் கூறுகையில், “கோயம்புத்தூர் துடியலூரில் எங்கள் புதிய வங்கி கிளையின் திறப்பு விழா நடைபெறுகிறது. வளமான விவசாயம், கலாச்சார வரலாறு நிறைந்த பகுதிக்கு எங்கள் சேவைகளை விரிவுபடுத்தும் பெருமைக்குரிய தருணம் இது. விவசாய பாரம்பரியம், துடிப்பான உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றுக்காக அறியப்பட்ட துடியலூர் மக்களின் பொருளாதாரத் தேவையை ஆதரிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை கொண்டுள்ளது. அந்த மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வங்கிச் சேவைகளை வழங்குவதன் மூலம், நீண்ட கால முன்னேற்றத்துடன் நவீன நிதியியல் தீர்வுகளை இணைத்து சமூகம் செழிக்க உதவ முயல்கிறோம்,” என்றார்.