நெல்லை.ஏப்.

    திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 6ஆவது வார்டு கவுன்சிலர் சாந்திநகர் வி.பவுல்ராஜ், 7ஆவது வார்டு கவுன்சிலர் இந்திரா மணி ஆகியோரின் ஏற்பாட்டில், நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை உதவியுடன் பாளையங்கோட்டை சாந்திநகர் சி.எஸ்.ஐ.  கிறிஸ்து ஆலய வளாகத்தில் உள்ள நெல்லைத் திருமண்டிலத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆறு மற்றும் ஏழாவது வார்டில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு இலவச மருத்துவம் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி.பவுல்ராஜ் மற்றும் இந்திரா மணி ஆகியோர் செய்து இருந்தனர்.