சென்னையை சேர்ந்த Elettratech நிறுவனத்துடன், இணைந்து IMQ India நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் Vincenzo De மார்ட்டினா, IMQ குழுமத்தின் தலைவர், Stefano Ferretti, தலைமை செயல் அலுவலர், IMQ இந்தியா, கிரண் ராஜு நாராயண், தலைமை இயக்க அலுவலர், மற்றும் சரவணன் ராமமூர்த்தி, தலைமை தொழில்நுட்ப அலுவலர் உட்பட பலர் பங்கேற்றார்கள்.
துவக்க விழாவில் திரு எம் என் ஸ்ரீதர், இயக்குனர், தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாடு துறை, தலைமையுரையாற்றினார். அவர் பேசுகையில்: “மருத்துவ கருவி சோதனை துறையில் பல்வேறு சவால்கள் உள்ளன. இந்து துறையை மேம்படுத்த பல்வேரு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து கோயம்பத்தூரில் மருத்துவ கருவி பரிசோதனை ஆய்வகம் உருவாக்க உள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் இந்த ஆய்வகம் பகுப்பாய்வாளர்களுக்கு வேலை உருவாக்க வழி வகை செய்யும்
மத்திய அரசின் பங்கு 60 % ஆகும், மற்றும் மாநில அரசின் பங்கு 40 % ஆகும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள மருந்து ஆய்வாளர்களுக்கான (Drug Inspectors) பயிற்சி திட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் அவர்களின் திறன் வளர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
IMQ அதிகாரிகள் ,” தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அதி நவீன உற்பத்தியிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. “China + 1″ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.” என்று கூறினார்