கோயம்புத்தூர், ஜனவரி 2025
இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் (LIC Mutual Fund), பங்கு வர்த்தகம், கடன் பாத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் எல்.ஐ.சி. எம்.எஃப். பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை (LIC MF Multi Asset Allocation Fund) அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய ஃபண்டில் 2025 ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் மற்றும் பணச் சந்தை முதலீடுகள் மற்றும் தங்க பரிமாற்ற ஃபண்ட்கள் (Exchange Traded Funds – ETF) உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதேஇத்திட்டத்தின் முதலீட்டு நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 65% நிஃப்டி 500 டி.ஆர்.ஐ.+, 25% நிஃப்டி கூட்டுக் கடன் இன்டெக்ஸ் + 10% உள்நாட்டு தங்கத்தின் விலை ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். திரு. நிகில் ருங்டா (Mr. Nikhil Rungta), திரு. சுமித் பட்நாகர் (Mr. Sumit Bhatnagar) மற்றும் திரு. பிரதிக் ஷ்ரோஃப் (Mr. Pratik Shroff) ஆகியோர் திட்டத்தின் நிதி மேலாளர்களாக இருப்பார்கள். இத்திட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் விற்பனை மற்றும் முதலீட்டிற்கு மீண்டும் திறக்கப்படும்.
நிதி வெளியீடு குறித்து எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மேலாண்மை லிமிடெடின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமானதிரு. ஆர்.கே. ஜா (Mr. R.K. Jha) கூறுகையில்,“பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதியங்கள் இப்பொழுது அதிகமாக பிரபலமாகி வருகின்றன, இது செறிவு அபாயங்களைக் குறைத்து சொத்துகளின் சிறந்த பன்மைப்படுத்தலை உறுதிப்படுத்துகிறது. இந்திய பரஸ்பர பங்குகள் அமைப்பு (Association of Mutual Funds in India – AMFI) வெளியிட்ட தரவுகளின்படி, கலப்பு மியூச்சுவல் ஃபண்ட்கள் 2024-ஆம் ஆண்டில் 27% வளர்ச்சியைக் கண்டுள்ளன, 2024 ஜனவரியில் ரூ. 6.90 லட்சம் கோடியாக இருந்தது 2024 டிசம்பரில் ரூ. 8.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதிகள் கலப்பு பிரிவின் கீழ் உள்ள சொத்துகள் மேலாண்மையில் (AUM) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. தற்பொழுது இது முதலீட்டாளர்களின் கலப்பு நிதிகளின் பால் தெளிவான ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது மற்றும் நமது புதிய நிதி அவர்கள் நலன்களுக்கு பொருத்தமாக உள்ளது”என்றார்.
எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மேலாண்மை லிமிடெட்டின் நிதி முதன்மை முதலீட்டு அதிகாரி (பங்கு) திரு. நிகில் ருங்டா (Mr. Nikhil Rungta) கூறுகையில், ” பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்ட்என்பது வளர்ச்சிக்கான பங்குகளின் சக்தியையும் கடனிலிருந்து வருமான ஈட்டுதலையும் பொருட்களின் நிலைத்தன்மையையும் இணைக்கும் ஒரு தீர்வாகும். இது நிதிச் சந்தைகள் நிலைத்த தலைமையில் இல்லாமல் மாறக்கூடிய சமயங்களில் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கான சமச்சீர் பாதையை வழங்குகிறது. ஒரே நேரத்தில் 3 சொத்து வகைகளிலும் முதலீடு செய்ய விரும்பும் மற்றும் சமபங்கு திட்டங்களைவிட குறைந்த நிலையற்ற தன்மை கொண்ட தன்மை வேண்டும் என்று கருதும் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். தெளிவாக, சந்தையின் நீண்ட கால கண்ணோட்டம் பல கால வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது, மேலும் புதிய நிதி அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இந்தப் பாய்ச்சலில் சவாரி செய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என்றார்.