நெல்லை.ஏப்.

   திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்  இராதாபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆனைகுடி பஞ்சாயத்து பெருமாள்புரம் மற்றும் திசையன்விளை அருகில் உள்ள ரோச்மாநகர் ஆகிய இடங்களில் வைத்து இளம் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து தெருமுனை பிரசாரம்  நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ், ஆனைகுடி பஞ்சாயத்து தலைவர் பஞ்சவர்ணம், ஆனைகுடி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோயல், மனித உரிமை ஆணைய வட்டாரத் தலைவர் அந்தோணிராஜ், ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் ஜான்கென்னடி, மாவட்டச் செயலாளர் கவிஞர் மருதூர் மணிமாறன், ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். இராதாபுரம் வட்டாரத் தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீரான், தோப்புவிளை கவிஞர் பிச்சையா உள்பட பலர்

கலந்து கொண்டனர். தொடர்ந்து தலைவர் ராகுல் காந்திக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக இடையன்குடி மற்றும் ஆனைகுடி தபால் அலுவலகங்களில் ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தைக் கண்டித்து,  பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.