பள்ளிப்பட்டு அருகே தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சேவல் சண்டை .திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் கல்லா மேடு கிராமத்தில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று காலை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சேவல் சண்டை போட்டி துவங்கியது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் சி. ஜெ .சீனிவாசன் தலைமை தாங்கி சேவல் சண்டை தொடங்கி வைத்தார் இதில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சேவல் உரிமையாளர்கள் கல்லா மேடு பகுதிக்கு பெருந்திரளாக குவிந்தனர். மொத்தம் 50 களம் அமைக்கப்பட்டுள்ளது பரிகோட் அமைத்து பொதுமக்கள் சேவல் சண்டை போட்டி கண்டு ரசிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது நுழைவு கட்டணம் செலுத்தி சேவல் சண்டை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது முதல் நாள் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 100க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதிக்கொண்டன இந்த போட்டி மூன்று நாட்களுக்கு நடைபெறும். வெற்றி பெறும் சேவல்களுக்கு இறுதி நாளில் பரிசு வழங்கப்படும் என்று விழா ஏற்பாட்டாளர் சக்திவேல் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு பேரூராட்சி கழக செயலாளர் எம். ஜே. ஜோதி குமார் ,பேரூர் கழக கவுன்சிலர் சி. ஜே. செந்தில்குமார், கவுன்சிலர்கள் மற்றும் காவலர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.