இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. கொழும்பு: டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தன் நாட்டு உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீன உயிரியல் பூங்காக்களில் அந்நாட்டின் 3 குரங்கு இனங்கள், மயில்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்மூலம் அவற்றை விவசாயிகள் கொல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது. இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடன் கொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மனதில் கொண்டு குரங்கள் தொடர்பான அந்நாட்டின் கோரிக்கையை இலங்கை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.