தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல்களும் வெளியிடப்படும்- அண்ணாமலை அறிவிப்பு

பல நல்ல மனிதர்களின் உதவியோடுதான் அரசியல் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது. இது எனக்கு இருக்கக்கூடிய பிரச்சினை. நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக முதல் முறை வாங்கிய சம்பளத்தில் இருந்து அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் போட்டு விடுவேன். சென்னை: தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக் குவிப்பு பட்டியலை இன்று வெளியிடுவேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில், தி.மு.க. அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டு பேசியதாவது

நான் கட்டியிருக்கும் கைக் கடிகாரத்தில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது. தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் என்னைப் பற்றி அவதூறுகளை பரப்ப ஆரம்பித்தார்கள். நான் பெங்களூரில் வேலை பார்த்த போது பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் இந்த கைக் கடிகாரத்தை வாங்கி இருக்கிறேன் என்றார்கள்.
அப்போது நான் தி.மு.க.வுக்கு ஒரு சவால் வைத்தேன். நான் என்னுடைய வாட்சுக்கான பில்லை கொடுக்கும் போது பில்லை மட்டும் கொடுக்கப்போவது கிடையாது. அதனுடன் சில கேள்விகளையும் வைக்கப் போகிறேன் என்றேன். இது நான் கேள்வி கேட்க வேண்டிய நேரம். நான் பட்டியல் வெளியிட்ட பிறகு நீங்கள் அது சரிதானா என்பதை பரிசோதித்து பாருங்கள். அதன் பிறகு 1 வாரம் கழித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ஒரு சாமானியன் அரசியலில் இருப்பது கடினமான வேலை. எந்த சாமானியனாக இருந்தாலும் சரி, அதில் முதல் தலைமுறை சமானியனாக இருந்தால் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு முன்பு பாதை இல்லை. யாரும் பாதை போடவில்லை. அந்த பாதையை உருவாக்க வேண்டிய கட்டாயம் முதல் தலைமுறை சாமானியனுக்கு இருக்கிறது. அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, தொழில் அதிபராக இருந்தாலும் சரி. அந்த பிரச்சினைதான் எனக்கு இருக்கிறது