தென்காசி மாவட்டம் இலஞ்சியில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் உரிமை துறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நேற்று ‌காலை 6.30 மணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி குமாரர் கோயில் விலக்கு, வல்லம் சிலுவை முக்கு வழியாக மீண்டும் இராமசாமி பிள்ளை பள்ளி வரை

 5கி.மீ தூரம் வரை நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் முதலாவதாக அரசு மேல்நிலைப் பள்ளி ஆலங்குளத்தை சார்ந்த செல்வி. மு. பாக்கியவதி, இரண்டாமிடம் செல்வி. மு.செ. மாணிக்க ஸ்ரீ, ஆக்ஸ்போர்டு பள்ளி, குத்துக்கல்வலசை மற்றும் மூன்றாமிடத்தினை செல்வி. மா.பொனிஷா, இராமசுவாமி மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி அவர்களும் தட்டிச் சென்றார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் குளிர் பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. விழாவில் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் கு.வினு, தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தென்காசி மாவட்ட சகி ஒருங்கிணைப்பாளர் மையத்தின் மைய நிர்வாகி  ஜெயராணி, சமூக விரிவாக்க அலுவலர் ஆரோக்கிய மேரி, இராமசுவாமி பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி இலஞ்சி தலைமையாசிரியர்  ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.