துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரத்தை சேர்ந்த முகமது ரபீக் மற்றும் இமாம் காசிம் ஆகிய இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இரண்டு குடும்பத்தினருக்கும் வழங்கினார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்  மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.