————————————————–

இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கம் அறிவிப்பு

சேலம் 

ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை மூலம் வளர்ச்சி”என்னும் தலைப்பில் ‘ஐடிஎம்இ ஆப்பிரிக்கா – எம்.இ. 2023’ இயந்திர கண்காட்சியின் 2வது பதிப்பு கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்கள் நடைபெற இருப்பதாக இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஜவுளிதுறையானது நுட்பமான மற்றும் வெளிப்படையான வழிகளில் நம் உலகத்தை உருவாக்கி உள்ளது.நெசவுத்தொழிலானது நமது கலாச்சாரம் மற்றும் புவியியல் சார்ந்த நடைமுறைகள், பாரம்பரியம், சமூகம் மற்றும் தேசங்களை ஒன்றிணைக்கும் நமது வாழ்வாதாரம், வளர்ச்சி, படைப்பாற்றல் ஆகியவற்றிற்கான சரியான மூலதாரமாக உள்ளது. அதை வலியுறுத்தும் விதமாக தற்போது இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இது இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக இருக்கும். வணிகத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நல்லிணக்கமும் செழுமையும் ஒன்றாக இருக்க வேண்டும். ஜவுளி, அது சார்ந்த பொறியியல் தொழில்நுட்பம், துணை மற்றும் அது சார்ந்த தொழில் ஆகியவற்றில் வணிகம், ஆதாரம், ஒத்துழைப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கான எல்லையற்ற வாய்ப்புகளைத் உருவாக்குவதன் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஜவுளித் தொழிலை மேம்படுத்துவதே ‘ஐடிஎம்இஆப்ரிக்கா – எம்.இ. 2023’ கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான வர்த்தக விரிவாக்கத்திற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், தற்போது இந்த பிராந்தியங்களுடனான வர்த்தகம் சில துறைகளுக்கு மட்டுமே உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த கண்காட்சி கென்யாவில் நடைபெற உள்ளது. உலகளவில் ஜவுளித்தொழிலில் 2வது பெரிய நாடாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது.மேலும் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியானது ஜவுளி பொறியியல் தொழில்நுட்பத்தில் வலிமை மிக்க அடித்தளத்தைக்கொண்டுள்ளது. எனவே இந்த நிலையில், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வளர்ந்து வரும் ஜவுளித் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா தற்போது அந்நாடுகளுடன் இணைந்துள்ளது. அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் இந்த நாடுகளின் ஜவுளித்துறையை மேம்படுத்தில் வளர்ச்சி காண முடியும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.எனவே இதை கருத்தில் கொண்டு, வர்த்தகம், முதலீடு, வணிக நட்பு சூழலை உருவாக்குதல் மற்றும் தனியார் துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் இந்த கண்காட்சி அரசு, வணிக சமூகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கூட்டாக பணியாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. எத்தியோப்பியா, போட்ஸ்வானா, எகிப்து, கென்யா, தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், புருண்டி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, ஜிபூட்டி, எரித்திரியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுடன் வணிகத்தை எளிதாக்கும் புதிய வாய்ப்புகளை இந்த கண்காட்சி வழங்கும். ஆப்பிரிக்க கண்டத்தை பொறுத்தவரை வளர்ந்து வரும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துடன் 80 ஆண்டுகளுக்கும் மேலான வளர்ச்சி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன், கென்யா ஆப்பிரிக்காவின் ஜவுளி மற்றும் ஆடை மையமாக மாறுவதற்கான சரியான பாதையை நோக்கி பயணிக்கிறது. ஆப்பிரிக்க யூனியனின் முக்கிய நாடான கென்யா, இந்த சர்வதேச வணிகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வை நடத்துவதற்கு பொருத்தமான நாடாக இருக்கும் என்று கருதி இந்த கண்காட்சி அந்நாட்டின் தலைநகர் நைரோபியில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இது ஜவுளி தொழில்நுட்பம், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள், தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குகிறது. இதன் மூலம், அதன் ஜவுளித் தொழிலை நவீனமயமாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்து வரும் இந்நாடு தன்னை வலுப்படுத்திக் கொள்வதுடன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்அதிக கவனம் செலுத்துவதோடு, ஜவுளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மையமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். அத்துடன் பருத்தி விதை, பருத்தி விவசாய தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்,பொறியியல் தயாரிப்புகள் தொடர்பான இயந்திரங்கள்,வீட்டு ஜவுளி பொருட்கள், ஜவுளித் தொழிலுக்கான தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப தகவல் சேவைகள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளிலும் முக்கிய கவனம் செலுத்தும். இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளது என்று இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சிகள் சங்கம் தெரிவித்துள்ளது.