ஏர்வாடி தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்
ஏர்வாடி தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆணையின்படி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்த
ஏர்வாடி பஜாரில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர்
ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் டாக்டர் எஸ்.பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சத்யாகிரகப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எம்.அசன் ஷேக், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வால்டர் எட்வர்டு, நான்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், அம்பை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராம்சிங்,பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ் தனராஜ், ஜார்ஜ், மாவட்டச் செயலாளர் கவிஞர் மருதூர் மணிமாறன், வட்டாரரத் தலைவர்கள் வள்ளியூர் அருள் தாசன், களக்காடு பிராங்ளின், இராதாபுரம் முருகன், மனித உரிமை இராதாபுரம் வட்டாரத் தலைவர் அந்தோணி ராஜ், இராதாபுரம் வட்டார ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். அமைப்பாளர் ஜெயபாண்டி, பாளையங்கோட்டை வட்டாரத் தலைவர்கள் டியூக் துரைராஜ், ஆனந்தகுமார், நாங்குநேரி கிழக்கு வட்டாரத் தலைவர் காமராஜ், பணகுடி நகர காங்கிரஸ் தலைவர் எட்வின், மாவட்ட செயலாளர்கள் பணகுடி மணி, சுரேஷ்பாபு,
சிறுபான்மைதுறை ஒருங்கிணைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராபர்ட் சுஜின், களக்காடு நகராட்சி செயல் தலைவர்கள் முத்துக்குட்டி ,சிம்சோன்துரை, களக்காடு செயல் தலைவர் கலுங்கடி செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் தளபதிசமுத்திரம் செல்வராஜ், ஆறுமுகம், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜெபஸ்டின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.