தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர்துரை.இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,
உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தேசிய நுகர்வோர் சட்டம் 1986 -ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அனைத்து நுகர்வோரும் எல்லா விதமான பொருள்களின் தரத்தினை குறித்தும், பொருள்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் இந்த நுகர்வோர் சட்டம் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். பள்ளிகளில் இருந்தே மாணவ, மாணவியர்கள் நுகர்வோர் சட்டத்தினை அறிந்துக்கொள்ளும் வகையில் நுகர்வோர் கிளப் ஆரம்பிக்கப்பட்டு நமது மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த நுகர்வோர் கிளப் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு நுகர் பொருள் வாங்கும் இடத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தாலும், பொருள்கள் வாங்கும் பொழுது அந்த பொருள்கள் காலவதியான தேதிகளில் விற்பனை செய்தாலும் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மூலம் பொதுமக்களுக்கு நுகர்வோரின் அடிப்படை உரிமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் நுகர் பொருள் சட்டத்தினை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
தொடர்ந்து உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தின விழாவினை முன்னிட்டு,
கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி
பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கேடையம் மற்றும் பாராட்டு
சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரா.சுதா, துணைப்பதிவாளர்(பொது விநியோக திட்டம்) திவ்யா, வட்டார நுகர்வோர் சுற்றுசூழல் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் க.அரவிந், முதுநிலை மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) ஆர்.ராஜேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.