தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 01-01- மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி தலா ரூ.12,500/- வீதம் மற்றும் 02-மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிகள் தலா ரூ.8,500/-வீதம் ஆக மொத்தம் ரூ.21,000/-மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும்,கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக் களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ஜி.ராஜமனோகரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.