திமுகவை வலுப்படுத்தும் வகையிலும் அதிக பெண்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும். ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்த தமிழக முதலமைச்சரும். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான. மு. க. ஸ்டாலின் அறிவித்ததன் பேரில். திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய ஒன்றியங்களில் ஏற்கனவே படிவங்கள் வழங்கி. இந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தன. இது பூர்த்தி செய்யப்பட்டு முடிவடைந்த நிலையில் அதற்குண்டான படிவங்களை வழங்கும் முகாம் கே.ஜி. கண்டிகை கிராமத்தில் நடைபெற்றது. திருத்தணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பா. ஆர்த்திரவி தலைமையில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளரும் தொகுதி பொறுப்பாளருமான வி. பி. மணி மேற்பார்வையில் வழங்கப்பட்ட இந்த படிவங்களை. திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும். மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ். சந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இங்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தாகத்தை தணிக்கும் வகையில். பொதுமக்களுக்கு இளநீர். மோர். தர்ப்பூசணி மற்றும் இயற்கை உணவான கூழ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் சிரஞ்சீவிலு. வேலு. பாபு. நரேந்திரன். முனுசாமி. ரேணு குமார். தேவேந்திரன். ஒன்றிய கவுன்சிலர் ஜோதி சிரஞ்சீவிலு. திருத்தணி நகர இளைஞரணி அமைப்பாளர் ம. கிரண். மற்றும் மத்தூர் பன்னீர்செல்வம். உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.