தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.
மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடனும் தொடங்கி 11நாட்கள் நடைபெற்றது
தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவின் 11வது நாள் முக்கிய நிகழ்ச்சியாக காலை பக்தர்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும் இரவு பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில்
கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்தும், பெண்கள் மாவிளக்கு ஏற்றியும் நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். மறுநாள் விடையாற்றிவிழாவும். அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டுவிழாவும் நடைபெற்றது திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் நாகேஸ்வரன் சேர்வைகாரர் குடும்பத்தினர், நாட்டாண்மைகள் மகாலிங்கம் பிள்ளை, கலியமூர்த்தி பில்லுகட்டியார் மற்றும் உபயதாரர்கள்.
விழா குழுவினர், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.