திருத்தணி
மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பாக மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி. ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என சட்டசபையில் அறிவித்ததோடு. கடந்த 23ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாநில முழுவதும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் மீண்டும் மஞ்சள் பை பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில். திருத்தணி முருகன் கோயிலில் பத்து ரூபாய் செலுத்தினால் தானாகவே கிடைக்கும் தானியங்கி இயந்திரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி.ஜான்வர்கீஸ் திறந்து வைத்து பக்தர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மணிமேகலை ரகு குமார். கோயில் துணை ஆணையர் விஜயா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.