சேலம் பேர்லண்ஸ் காவல் நிலையம் சார்பில் போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வை அழகாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜென்னீஸ் அறக்கட்டளை திறன் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள்தலைமையில் விழிப்புணர்வு ,உயிரைக் குடிக்கும் மது மற்றும் புகைப்பழக்கம் தேவையா, முதலில் மதுவை நீங்கள் குடிப்பீர்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது மனிதனைக் குடிக்கும்.என்று பாதகைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொம்மலாட்டம் மூலமாக போதைப் பொருளின் தீமைகளை குறித்து அரசு இலவச திறன் பயிற்சி,நீட் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள் விளக்க உரையாற்றினார்.மேலும் இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர்,உதவி ஆய்வாளர் செல்வராஜ்,உமாபதி, சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஜென்னீஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்லின் எபி, மற்றும் ஆசிரியைகள் காயத்ரி,நித்யா, மைதிலி,தேன்,சிறப்பாக செய்திருந்தனர்.