தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, செருமாக்கநல்லூர் ஊராட்சி, புரசங்காடு கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் அறிவானந்தம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துவைக்கோல் போட்டும், கம்பிவேலி அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து பள்ளி பயன்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து கிராமமக்கள் பாபநாசம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். கிராமமக்களின் புகாரை தொடர்ந்து பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி. அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன் அமானுல்லா. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி. அனிதாகிரேஸி ஆகியோர் முன்னிலையில் தனிநபர் ஆக்கிரமித்து போடப்பட்ட கம்பி வேலிகள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைகோல் கட்டுகள் அகற்றப்பட்டு, அரசு பள்ளிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராபியாபேகம், துணை தாசில்தார் பிரியா, ஊராட்சிமன்ற தலைவர்கள் கணேசன், ராமநாதன் ஊராட்சி செயலர் அம்பிகா மற்றும் வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல்துறையினர் உடன் இருந்தனர்.