வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி மத்திய பகுதி செயலாளர் ஜி .ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் ,மாநில தேர்தல் பிரிவு செயலாளருமான என். ஜி .பார்த்திபன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர், இளநீர் ,தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏ. எஸ் .ராஜா ,மாநில எம் ஜி ஆர் மன்ற பொருளாளர் எஸ் .ராஜா ,தர்மலிங்கம், வேலூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் வி. பி. எம். குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.