கோவை மாவட்டம்  கொடிசியா தொழிற்காட்சி  வளாகத்தில் சப்கான் கண்காட்சி மே 10 முதல் துவக்கம். சப்கான் கண்காட்சி குறித்து தலைவர் சஞ்சீவி குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் சப்கான் கண்காட்சி 2005 ஆம் ஆண்டு முதல் கண்காட்சி நடத்தி வருகின்றன. இந்த வருடம் மே10 முதல் மே12 வரை நடைபெறவுள்ள கண்காட்சியில் 15பொதுத்துறை நிறுவனங்கள் 17பெரும் தனியார் தொழிற்சாலைகள் ஒரு வங்கி மற்றும் 214 நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.எனவே இதன்மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தனர்.இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வக இயக்குநர் ஜி.ஏ. ஸ்ரீனிவாச மூர்த்தி கலந்து கொள்கிறார். இந்த கண்காட்சியில் சிறு குறு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.