சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். கார்ட்டூம்: சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்று இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். கடந்த 9 நாட்களில் சூடானில் இருந்து வெற்றிகரமாக 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.