பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்க கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை பகுதியில் கோடை பருவத்தில் நடவு மற்றும் தெளிப்பு முறையில் பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் நடவு வயல்கள் தொடர் மழை காரணமாக மழை நீர் வயல்களில் தேங்கி நாற்றுகள் அழுகி வீணாகும் நிலை உள்ளது. கரம்பை பகுதியில் உள்ள லிங்கன் வடிகால் வாய்க்கால் பல வருஷமா தூர்வாராததால் மழைநீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கரம்பை பகுதி விவசாயிகள் கூறியதாவது
கரம்பை பகுதியில் உள்ள லிங்கன் வாய்க்கால் பல வருடங்களாக தூர்வாராததால் தற்போது பெய்த கனமழையால் கோடை நடவு வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் அழுகு வீணாகி வருகிறது இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரனம் வழங்க நடவடிக்கை எடுக்கனும் இவ்வாறு தெரிவித்தனர்.