ரூ.16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி:

மாவட்டக் கவுன்சிலர் சாலமோன் டேவிட் தொடங்கி வைத்தார்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலத்திடியூர் பஞ்சாயத்தில் உள்ள காமராஜர்நகரில் ரூ.8 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பொன்னாக்குடி பஞ்சாயத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியும் திருநெல்வேலி மாவட்டக் கவுன்சிலர் சா.சாலமோன் டேவிட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை ஒன்றியக் கவுன்சிலர்கள் பொன்னாக்குடி நம்பிராஜன், தருவை ராமகிருஷ்ணன்,  பொன்னாக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம் பரமசிவன், துணைத் தலைவர் மெர்சி செலத்துரை, மேலத்திடியூர் பஞ்சாயத்து தலைவர் வி.ராமகிருஷ்ணன் மற்றும் கிராம பொதுமக்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.