மருத்துவர் லயனல் ராஜ் அமெரிக்க விருது பெற்றார்!
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டீ.லயனல் ராஜ். கண் மருத்துவத்துறையில் செய்த பல்வேறு சாதனைகளைப் பாராட்டி மருத்துவவியல் சங்கங்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் மூலம் அமெரிக்கன் அகாடமி, அமெரிக்கன் சொசைட்டி, ஈரோப்பியன் சொசைட்டி, வேர்ல்டு ஆப்தால்மிக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை டாக்டர் டீ.லயனல் ராஜ் பெற்றுள்ளார்.
தற்போது கண் புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க ஐக்கிய சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் டீ.லயனல் ராஜ், கண் சிகிச்சையியலில் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், சேவை மனப்பான்மை கொண்ட அணுகுமுறை, மருத்துவ அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் இரண்டு சர்வதேச விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளது.
மேலும் ஜான்சிபார் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்ற தேசிய சுகாதார நிறுவனம், டாக்டர் டீ.லயனல் ராஜிக்கு, கௌரவப் பேராசிரியர் பட்டத்தை வழங்கியும் சிறப்பு செய்துள்ளது. இத்தகவலை நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையின் கண் ஆராய்ச்சித்துறை இயக்குனர் டாக்டர் கீபர் டேவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பொழுது திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் டீ.லயனல் ராஜ், துணைப் பொது மேலாளர் பிரபு, டெக்னோ மீடியா முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.