தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 வது பிறந்த நாளை அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதன் ஓர் பகுதியாக கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டின் பேரில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பூரண உடல் நலத்துடன் நீடூடி வாழ வேண்டியும்,மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டியும் சிறப்பு தங்க தேர் பவனி விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பங்கேற்று தங்க தேரினை இழுத்து காமாட்சியம்பாளை வழிபட்டு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவிக்கையில்,

திமுக ஆட்சி நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது,இபிஎஸ்-ஐ ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்,வருகின்ற நாடாளுமன்ற,சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி சரித்திரம் அடையும் என்றும்,

அதிமுகவால் வளர்ந்தவர் வைத்திலிங்கம்,அவரை வளர்த்து விட்ட இந்த இயக்கத்தை கூர் தீட்டி பார்க்கிறார்,இதற்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்றும்,திமுகவின் பி டீம் ஆக செயல்பட்டுக்கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கின்ற யாராக இருந்தாலும் அழிந்து போவார்கள்,எடப்பாடியார் தலைமையில் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் மகத்தான மக்கள் பணி செய்யும் என்றும்,தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அத்துமீறி போய்விட்டார்,சொல் அதிகாரம்,பொருள் அதிகாரம் என சொல்லி கடைசியில் அவரே கல் எரிந்து கல் அதிகாரத்தில் அவரே பலி ஆகி விட்டார்,ஆகையால் தான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்றும், இஸ்லாமியரின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றோம் என சொல்லுகின்ற திமுக ஓர் இஸ்லாமிய அமைச்சரை எடுத்துவிட்டு இன்னொரு இஸ்லாமிய அமைச்சருக்கு வாய்ப்பு தரவில்லை என்றும்,

தற்போது தமிழக தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள டிஆர்பி ராஜா குடும்ப அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு,அவர்கள் மீது பல தொழிற்சாலைகள், சாராய தொழிற்சாலைகள் உள்ளன ஆகையால் தான் அவருக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது என்றும்,பணம் இருப்பவர்களுக்கு தான் திமுகவில் அரிகாரம் போய் சேர்கின்றது,திமுகவில் பெரிய பதவியில் இருந்தால் தான் மகனுக்கு வாய்ப்பு தருகின்ற கட்சியாக திமுக இருக்கின்றது,குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் என்றும், தமிழக நிதியமைச்சராக இருந்த 

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவரது இலாகா மாற்றப்பட்டு தற்போது அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி,திமுகவின் லட்சணம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சரும்,காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான வி.சோமசுந்தரம்,அதிமுக கழக அமைப்புச்செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு,எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம் அதிமுக நிர்வாகிகள் தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காடூர் ராஜூ, அத்திவாக்கம் ரமேஷ் , கேயுஎஸ் சோமசுந்தரம்,கோல்ட் ரவி, கோல்ட் மோகன், டவுன் பேங்க் பாலாஜி , எம்பி ஸ்டாலின் , விசு ,மானாமதி வில்வபதி , வாசு உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.