இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, 5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்