கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மீனவர் பகுதியை  சார்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (வயது37)மீன் பிடி தொழில் செய்து வருகிறார். 13.5.2023 மாலை 7 மணி அளவில் சின்ன சேலம் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் பாலாஜியின் மனைவி தங்கமணி இன்று காலை சின்னசேலம் காவல் நிலையத்தில் தன் கணவர் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். பாலஜியின் இருசக்கர வாகனம் ஏரிக்கரையில் இருந்ததன் பெயரில் சின்னசேலம் தீயணைப்பு துறையினர் பாலாஜி  ஏரியில் மீன்பிடிக்க சென்றபோது மூழ்கி இருக்கலாம் என எண்ணி தீயணைப்பு வீரர்கள் ஏரிக்குள் பாலாஜியை தேடினர். அப்பொழுது அவர் மீன்பிடிப்பதற்காக இடப்பட்டிருந்த வலையில் சிக்கி நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது, நீரில் மூழ்கிய சடலத்தை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தனர் பின்னர் உடல்  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது