கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அம்ரிதா விஸ்வ பீடத்தில் ஒன்றுபட்ட ஒரு உலகிற்கான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு மீது நடைபெறும் c20 உச்சி மாநாடு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பம்,பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான C20-ன் அதிகாரப்பூர்வ நடவடிக்கை குழுவால் நடத்தப்படும் இந்த இரு நாட்கள் மாநாட்டு நிகழ்வின் தொடக்கவிழாவில் இந்தியாவிலிருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் பல பிரபல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
இத்தொடக்க விழாவில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி,இந்திய பிரதமரது அலுவலகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பன்ட், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத்தலைவரும், C20 முக்கூட்டு குழுவின் உறுப்பினருமான சுவாமி அம்ரிதாஸ்வரூபானந்த பூரி, ஐ.நா. பொதுச்செயலரின் முன்னாள் சிறப்பு ஆலோசகரும், செர்பா C20 பொறுப்பு வகிப்பவருமான விஜய் நம்பியார், பிஜேபி தேசிய செய்தி தொடர்பாளர் & தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி கோஷ், அம்ரிதா விஸ்வ பீடத்தின் துணைவேந்தர் டாக்டர். வெங்கட் ரங்கன், அம்ரிதா விஸ்வ வித்யபீடத்தின் டீன் & தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு & வெளிப்படைத்தன்மை மீதான C20 உச்சி மாநாட்டின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கிருஷ்ணஸ்ரீ அச்சுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.பேட்ரிக் J. மெக்கவர்ன் ஃபவுண்டேஷனின் தலைவர் & அறங்காவலர் விலாஸ் தார் இஸ்ரேலிய நிதியமைச்சகத்தின் ஆலோசகர் மற்றும் நிதிசார் சைபர் உத்தி நிபுணர் மிச்சா வெய்ஸ் பிரேசிலின் கல்வி பெறும் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் கொள்கை ஆலோசகர் மார்செலி ஃபிராஸார்டு தென்னாப்பிரிக்காவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் மின்-ஆளுகை துறையின் தாக்க பாதிப்பு துறை மேலாளர் மேத்யூ செட்டி,இன்டல் கார்ப்பரேஷனின் இயக்குனர் மற்றும் சர்வதேச ஆலோசனை கவுன்சிலைச் சேர்ந்த அலிசன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் இம்மாநாட்டு தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்