கோவை மாவட்டம் கோடை கால கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோலாகலமாக துவங்கியது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் சிறப்பு விற்பனை கண்காட்சி ஒண்பதாவது ஆண்டாக கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது மே 19,20,21 ந்தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,உணவு வகைகள் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கோகிளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக,மீனா ஜெயக்குமார்,லாவண்யா சங்கர்,காயத்ரி,இன்னர் வீல் கிளப் விஜயலட்சுமி, ஃபர்னிச்சர் பாயிண்ட் ரித்து,யுவா பவுண்டேஷன் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வது குறிப்பிடத்தக்கது