தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வெள்ளையன் என்பவர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது நான் ஆழ்வார்குறிச்சியில் மண்பாண்ட தொழில் செய்து வருகிறேன் என் மனைவி பெயர் உமா எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் வெங்கடேஷ் (6), செல்வசுதேஷ் (3) மூத்த மகன்  6 வயதான வெங்கடேஷ்க்கு கடந்த 20ம் தேதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மகனுக்கு டிரிப் ஏற்றும் போது வேகமாக ஏற்றியதால் வலிப்பு ஏற்பட்டதாக செவிலியர்கள் தெரிவிக்க, மருத்துவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட்  மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்று  தெரிவிக்க 108 ஆம்புலன்ஸை அழைக்க ஆம்புலன்ஸ் தாமதமாக தான் வந்து சேர்ந்தது அந்த ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் வசதி இருந்தும் செயல்படவில்லை இதனால் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்து விட்டான் முதல் நாள் மருத்துவமனையில் அனுமதித்து மறுநாளே இறந்த எனது மகன் இறப்புக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுமே காரணம் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது மகனின் மரணத்திற்கு நீதி பெற்று தாருங்கள் என்று அந்த மனுவில் தெரிவித்தார் 

6 வயது மகனை இரண்டு நாள் காய்ச்சலில் பலி கொடுத்த தந்தை மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸில் நடந்தவற்றை கண்ணீருடன் பேட்டி அளித்தது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.