ஆரணி

கண்ணமங்கலத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மாவட்ட தொல்லியியல் துறை அலுவலர் ஆர்.சேகர்  ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிதிலமடைந்த கோயில்கள் சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணை ஆணையர் குமரேசன், ஆய்வாளர் முத்துசாமி உத்திரவின்படி சிதிலமடைந்த கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  கண்ணமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயணபெருமாள் கோயில், ராமநாத ஈஸ்வரர் கே்ாயில், திரவுபதியம்மன் கோயில்களை மாவட்ட தொல்லியியல் அலுவலர் முனைவர் ஆர்.சேகர் ஆய்வு செய்தார். 

அப்போது, தமிழக கிராமப்புறங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிதிலமடைந்த கோயில்களை ₹2லட்சம் செலவில் சீரமைக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. 

இதன்படி கண்ணமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் ராஜகோபுரம் உயர்த்தி கட்டுவதற்கும், கோயில் உள் வளாகத்தில் உள்ள சிமெண்ட் கூரையை அகற்றி விட்டு, கான்கிரிட் தளம் அமைக்கவும், முழு கோயிலையும் புனரமைத்து  கும்பாபிஷேகம் செய்யவும், இதேபோல் ராமநாத ஈஸ்வரர் கோயில், திரவுபதியம்மன் கோயில்கள் சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 

அரசு அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது உதவியாளர் ராஜ்குமார், விழாக்குழுத்தலைவர் பாண்டியன்,   அறங்காவலர் குழு தலைவர் கோவர்த்தனன், பேரூராட்சி துணைத்தலைவர் குமார், கவுன்சிலர் முரளி, துணைச்செயலாளர் மணியரசு மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.