வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் வட்டம் கவசம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிரசு ஏற்றும் விழாவில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்து அபிஷேகமும் மகாதீப ஆராதனையும் அம்மன் வீதி உலாவும் ,கோலாட்டம் ,சிலம்பாட்டம் ,மேள தாளங்கள் முழங்க சிரசு ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், இளைஞர்கள்,நாட்டாமை ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.