வாரம் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். தேவையான பொருட்கள் : கோவக்காய் – 1 கப் தக்காளி – 3 தனியா தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு சீரகம் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் – சிறிதளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் தேங்காய் – 1 பத்தை செய்முறை : * கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். * வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். * தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். * அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும். * அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும். * அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். * சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!