நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப்வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வாழைத்தண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – 1 கப் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு.. எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லி – சிறிது செய்முறை: * வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். * ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். * வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். * பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். * பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.