கோவை மாவட்டம் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கௌரவ விருந்தினர்களாக கோவை கே. ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவச்சலம் ஸ்ரீவாரி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி விழாவில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி டாக்டர் கலியமூர்த்தி கூறுகையில் செந்தில்குமார், ரகுபதி, பிரசன்னா என எழுச்சி இளைஞர்கள் குழுவாக உள்ளனர். விஜய் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் சாதனை இளைஞர். இந்தியாவின் வாழ்க்கைப் பாதையை தகவல் தொழிநுட்பத்துறையில் தனித்துவமிக்க பாதையாக மாற்றிக்காட்டவுள்ளார் என்று தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூடியூபர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.
பிளான்நெக்ஸ்ட்4U சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் எஸ்பி. விஜய் மற்றும் பிரியங்கா விஜய் ஆகியோர் கூறும்போது எங்கள் ஆப் சேவைக்காக கோவையில் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நாலு மினி மைக்ரோ மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதன் அறிமுக விழா களம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அந்நிறுவனத்தின் சேர்மன் எஸ்பி விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் இச்செயலியின் தொழில்நுட்ப இயக்குனர் பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்க உள்ள மற்றும் தொழிலில் ஏற்கனவே தொழில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.