திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால சிறப்பு கைப்பந்து (வாலிபால்) போட்டி திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனி. ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மின்னொளி போட்டிகளாக நடத்தப்பட்டது. இதில் ஆடவர்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட ஆண்கள் அணிகள் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் பிரிவு அணிகளும். விளையாடினர் இறுதிப் போட்டியில் திருத்தணி அணியும் புல்லரம்பாக்கம் அணியும் மோதியதில் திருத்தணி அணி வெற்றி பெற்றது.அதே போல் பெண்கள் பிரிவில் திருவேற்காடு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பட்டம் ரூபாய் 10 ஆயிரம ரொக்க பணம். மேலும் கோப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற அணிக்கு.ரூபாய் 6.ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ். கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள. வீராங்கனைகளுக்கு . கோப்பைகள். பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். சிறந்து விளையாடிய வீரர்களுக்கு மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் டாக்டர் லயன் வி. குப்புசாமி சிறந்த ஆட்டக்காரர்கள் மற்றும் தொடர் நாயகன் உள்ளிட்ட சிறப்பான வீரர்கள் வீராங்கனைகளுக்கு மெடல். மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில். கைப்பந்து கழக பொருளாளர்..எம்.பாரதி மற்றும் . டாக்டர் வெங்கடேசன் எம்.சுல்தான். உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.