1
தஞ்சாவூரில் நடந்த ஒளிரும் ஆசிரியர்கள் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உலக சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு உலக சாதனை சான்றிதழை வழங்கினார்
வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மாலதி இவர் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றல் கற்பித்தலுக்கு உறுதுணையாக இணையதளம் மூலமாக நம் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி தொடர்ந்து 605 நாட்கள் கொடுத்தது கொடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார்
அதே பள்ளியைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படித்த சகதிபிரபா சிலம்பம் சுற்றிக்கொண்டு அறிவியல் பாடத்தில் உள்ள தனிம வரிசை அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களை 50 வினாடிகளில் சொல்லி உலக சாதனை படைத்திருக்கிறார்
அதே பள்ளியைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கர்ணா ரிமோட் கண்ட்ரோல் கார் செய்து கொண்டு அறிவியல் பாடத்தில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 50 வினாடிகளில் சொல்லி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்
இவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தி இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மாலதிக்கு பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கி கொள்கின்றனர்.