முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மர கன்றுகளை நட்டனர் உலக சுற்றுப்புறசூழல் தினத்தை முன்னிட்டு நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டனர். முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ராஜ்குமார் தலைமையில் குற்றவியல் நீதிபதி அருள்சங்கர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட வழக்கறிஞர்கள் திறனாக கலந்துகொண்டனர். மரக்கன்றுகளை நட்டு சார்பு நீதிபதி ராஜ்குமார் பேசியதாவது:மரக்கன்றுகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் பூமி வெப்பமடைவதை தடுக்கலாம். நாம் ஒவ்வெரறு வரும் ஒரு மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு அடைக்கலமேரி செய்திருந்தார்