கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சின்னசேலம் ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவேற்புரை அண்ணாமலை வழங்கினார். விளக்க உரை மாநில செயலாளர் கனி அவர்கள் ஆற்றினார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், 1.மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி மாத சம்பளம் ரூபாய் 13,848 மற்றும் ஊழியர்களுக்கு மாதம் மாதம் குழு காப்பீட்டுத் தொகையை கட்டி ரசீதியை பணியாளர்களிடம் வழங்குக. 2.தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம், கொரோனா ஊக்கத்தொகை வழங்குக, 3. தூய்மைக் காவலர்களுக்கு அரசு அறிவித்த ரூபாய் 5000 உத்தரவு வழங்குக போன்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சின்னசேலம் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள், பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.