முதுகுளத்தூர் வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி தலைமையில்நடைபெற்றது.முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டம் மற்றும் தெற்கு உள்வட்டத்தில்மனுக்கள் பெறப்பட்டது. ஷை வருவாய் தீர்வாய தணிக்கையின் போது வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் பூ முருகன், வட்ட பொருளாளர் அய்யப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறையினர் கலந்து கொண்டனர்.