திருச்சி டால்மியாபுரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா

திருச்சி  உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு, டால்மியாபுரம் கிளை நூலகத்தில்  புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் பி. ரெங்கசாமி அவர்கள் வரவேற்றார். கல்லக்குடி பேரூராட்சி தலைவர் பி. பால்துரை அவர்கள் தலைமை வகித்து, புதிய உறுப்பினர்கள் 10 பேருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர்  குணசேகரன்  முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் பழமொழிகள் மற்றும் விடுகதைகள் சொல்லும் போட்டியில் வென்ற மாணவர்களுக்கும், நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் சுரேகா,ரீட்டா ஆரோக்கியமேரி ஆகிய இருவருக்கும் பரிசுகள் வழங்கி […]

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 01-01- மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி தலா ரூ.12,500/- வீதம் மற்றும் 02-மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிகள் தலா ரூ.8,500/-வீதம் ஆக மொத்தம் ரூ.21,000/-மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் […]

பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ள

சூப்பர்-டூப்பர் ரெஃப்ரெஷர் 7அப்- பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ள சூப்பர்-டூப்பர் ரெஃப்ரெஷர் 7அப்-ன் இந்த கோடையில் பார்வையாளர்களை புத்துணர்ச்சியடையச்செய்யும் தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, கிளியர்ரி ஃப்ரெஷிங்பானமான 7அப் பிரபல பாடகரும் இசை மேதையுமான அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து ஒரு சூப்பர்-டூப்பர் மியூசிக்கலை உருவாக்கியுள்ளது. இசை மற்றும் திரைப்படத்துறைகளுக்கான தனது பங்களிப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ள அனிருத் ரவிச்சந்தர், இந்த இசை கீதத்தின் மூலம் பார்வையாளர்களை மேலும் புத்துணர்ச்சியடைய செய்யும் வகையில் 7அப் உலகிற்கு தனது தனித்துவமான பாணியையும் பெப்பி ஆளுமையையும் கொண்டுவருகிறார். தொடக்கக்காட்சியில், ஒரு […]

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது – ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும்  நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள்.ரமலான் 30நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர்.இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.பெருநாள் […]

சிங்கப்பூர் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்

பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் […]

சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 413ஆக அதிகரிப்பு 

சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது. இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் […]

காணிக்கையாக வழங்கப்படும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி

திருப்பதி தேவஸ்தானம் வியாபார நிறுவனம் இல்லை எனவும், இது ஒரு சமூக சேவை செய்யக்கூடிய ஆன்மீக ஸ்தலம். மத்திய அரசு விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் விமர்சனம் செய்து வந்தனர். திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம் செலுத்துகின்றனர். நேரடியாக தரிசனம் செய்ய முடியாத வெளிநாட்டு பக்தர்கள் ஆன்லைன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை டெபாசிட் செய்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் […]

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை  195 கிராம் தங்கம், 1 கிலோ 205 கிராம் வெள்ளி இருந்தது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பங் குனி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 5-ந் தேதி காலையில் […]

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர்துரை.இரவிச்சந்திரன், தலைமையில்  நடைபெற்றது.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது, உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தேசிய நுகர்வோர் சட்டம் 1986 -ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அனைத்து நுகர்வோரும் எல்லா விதமான பொருள்களின் […]

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்

ஏர்வாடி தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ராகுல் காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏர்வாடி தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆணையின்படி காங்கிரஸ் மேனாள் தலைவர்  ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்த ஏர்வாடி பஜாரில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் […]