நாங்குநேரி: களக்காடு பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை தனியார் விநியோகம் செய்வதால் நோய் பரவும் அபாயம்!

ஒரு குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்! நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் தரப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், கோடைகாலம் காரணமாக திடீர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில்பத்து பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதேபோல், நாங்குநேரி தொகுதியின் பல்வேறு இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஸ்பேஸ் எக்சின் பிரமாண்ட ராக்கெட் சோதனை தோல்வி 

நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதா்கள் மற்றும் பொருள்களை அனுப்பும் நோக்கில் ஸ்டாா்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ராக்கெட்டின் பலகட்ட சோதனைகளில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சந்தித்தது நினைவுகூரத்தக்கது. விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட ‘ஸ்டாா்ஷிப்’ ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது. அமெரிக்க தொழில் அதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்ஷிப் ராக்கெட், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரமாண்டமான, அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் […]

ஐபிஎல் டி20 கிரிக்கெட் – டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு          

ஐபிஎல் டி20 கிரிக்கெட் – டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு                இன்றைய போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் […]

தூத்துக்குடியில் 4ஆம் புத்தக திருவிழா : கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதனை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் லோ.பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சங்கர், தாசில்தார் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் ஒவ்வொரு […]

முதுகுளத்தூர் தாலுகா ஆதிதிரவிடர் நலப்பள்ளி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆதிதிரவிடர் நலப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதுகுளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சி தலைவர் ஜானிடா ம் வர்கிஸ் தலைமையில்  நடைபெற்றது . நிகழ்ச்ச்யில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  அண்ணம்மால் முன்னிலையிலும் தனி வட்டாச்சயர் தென்னராசு அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் தாசில்தார் சிவகுமார் , பரமக்குடி ஆதிதிராவிட தாசில்தார் சடையான்டி , ஆர்.ஐ தினேஷ், சிங்கமுத்து அகியோர் கலந்து கொண்டன்ர்.

காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் அதிமுக சார்பில்

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிகரை தேசிய நெடுஞ்சாலை அருகே அதிமுக சார்பில் மக்கள் தாக்கம் தீர்க்கும் நீர் மோர் பந்தலை சிறுவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளரும் சிறுவாக்கம் எம்.ஆனந்தன் ஏற்பாட்டில் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் ,மோர் .வெள்ளரிக்காய், தர்பூசணி, ஜூஸ் ஆகியவை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு  , அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி வி.பன்னீர்செல்வம் , மாவட்ட […]

காஞ்சிபுரம் முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச் செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை 26வது நினைவு நாள்

காஞ்சிபுரம் முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச் செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை 26வது நினைவு நாளை முன்னிட்டு பூக்கடைசத்திரத்தில் உள்ள சி.வி.எம் அண்ணாமலையின் இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன்,மாவட்ட‌ பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி,ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் ,படுநெல்லி பி.பாபு, வாலாஜாபாத் ஊராட்சி பெருந்தலைவர் இழுப்பப்பட்டு ஆர்.கே. தேவேந்திரன் ,பகுதி செயலாளர்கள் திலகர் ,சந்துரு, […]

பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை தொடர்ந்து

தேர்தல்ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிசட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் அலுவலகத்தின் முன்பு நகர கழகச் செயலாளர் பிரீனீயோ கணேஷ்தலைமையில்பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்குஇனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் கந்தவேல்முருகன்,  ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன்,நகர மாணவரணி செயலாளர் செல்வராஜ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலை

ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலையால் கிராமமக்கள்  அவதி மழைகாலம் தொடங்கும் முன் சீரமைக்க  கிராமமக்கள் கோரிக்கை தஞ்சை, ஏப்.21- தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி  ஒன்றியத்தில் உள்ள  ராராமுத்திரகோட்டை  கீழ  கள்ளிமேடு மேலத்தெரு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை பல வருஷமாக  புதுப்பிக்கப்படாததால் மண் சாலையாகவே உள்ளது அதனால  கிராமவாசிகள் பல வருஷமாக  அவதியுற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் […]

அருணோதயம் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ள

நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க ஸ்ரீ அருணோதயம் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ள மா மரம் நடும் இயக்கம் சென்னை: தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் தொலைதூர கிராமமான ராமசமுத்திரம் கிராமத்தில், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு மெகா மா மரத்தோட்ட இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கும், அறிவுசார் குறைபாடுகள் உள்ள இளைஞர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் திறன் பயிற்சி அளிப்பது மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் உள்ளது. அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் […]