அரசு மற்றும் தனியார் மருத்துவரை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் – பணியிடை நீக்கம் செய்ய கமிஷனர் அமல்ராஜ்  உத்தரவு..,

  செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகிதா அன்ன கிறிஸ்டி, இவரிடம் மறைமலைநகரை சேர்ந்த ஒரு பெண் தனது 17வயது மகளை ரஞ்சித்(27), என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அப்போது சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது மறைமலை நகரில் இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு தான் கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி […]

தமிழகத்தில் முதல் மல்டி பிராண்ட் மின்சார வாகன விற்பனை கிளையை துவங்கிய பிலைவ்..,

இந்தியாவின் முன்னணி மல்டி பிராண்ட் எலக்ட்ரிக் வாகனக் கடையான BLive, அதன் முதல் எலக்ட்ரிக் வாகனக் கடையான கணேஷ் எலக்ட்ரிக் வாகனக் கடைகளை தமிழ்நாட்டில் திறந்துள்ளது. பிராண்டுகளின் தேர்வு மற்றும் சிறந்தசேவையில் வலுவான கவனம் செலுத்தி தமிழகத்தின்ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வாகனங்களை கொண்டுசெல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு, நிறுவனம் மாநிலத்தில் 25 மின்சார வாகனக்கடைகளைத் திறக்க இலக்கு வைத்துள்ளது. வேலூர்சாய்நாத் புரம் ஆரணி சாலையில் புதிதாக திறக்கப்பட்டகடையை வேலூர் எம்எல்ஏ, திரு. பி.கார்த்திகேயன்துவக்கிவைத்தார். தமிழ்நாடு மின்சார வாகனத்துறையில்சிறப்பாக செயலாற்றுவதாக பிலைவ் கருதுகிறது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளையில் பலமுன்னணி பிராண்டுகளான ரெவோல்ட், கைனெடிக்க்ரீன், ஓஎஸ்எம், ஹீரோ லெக்ட்ரோ, டாடா ஸ்ட்ரிடேர்மின்சார வாகனங்களை வழங்குகிறது. புதிய கிளை திறப்பு விழாவில் பேசிய பிலைவ் நிறுவனர்மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமர்த் கோல்கர்கூறுகையில், “தமிழகத்தில் எங்கள் முதல் கடையைஇங்கு அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த சேவையுடன் 2 மற்றும் 3-சக்கர வாகனங்களின்பரந்த தேர்வை வழங்குவதன் மூலம் இந்தபிராந்தியத்தில் மின்சார வாகனங்களைஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் தயாராகஇருக்கும் வாடிக்கையாளர்கள் தேர்வுக்குரிய இடமாகஇந்தக் கடை செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அங்காடியை தமிழ்நாட்டில் நிறுவுவதன்மூலம், அதிகமான டீலர்களை உரிமையாளர்களாகஆக்குவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் தடத்தைவிரிவுபடுத்தவும், இங்கு வாங்குபவர்களுக்கு தடையற்றமின்சார வாகன அனுபவத்தை வழங்கவும்திட்டமிட்டுள்ளோம்”. என்று கூறினார். பிலைவ் என்பது பலதரப்பட்ட மின்சார வாகனங்களைவழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தங்களதுwww.bliveEVstore.com இணையதளம் மூலம்பலதரப்பட்ட மின்சார வாகனங்களை வழங்குகிறது. இத்தளத்தில் 40கும் மேற்பட்ட தயாரிப்புகளைவழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தநுகர்வோர் அனுபவத்தை வழங்குகிறது. இதன்ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை இந்தியா முழுவதும்உள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார மிதிவண்டிகள், டெலிவரி மின்சார வாகனங்கள் ஆகியவற்றைவழங்குவதன் மூலம், பிலைவ் 2025ம் ஆண்டுக்குள்இந்தியாவில் 100 பிரீமியம் மல்டி-பிராண்ட்ஸ்டோர்களாக விரிவடைய திட்டமிட்டுள்ளது. பிலைவ்தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சார்ஜிங்உள்கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவைமற்றும் எளிதான நிதி விருப்பங்களை வழங்குவதன்மூலம் தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வணிகங்களுக்குஎலக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுக்கொள்வதைஎளிதாக்குகிறது.

போதை பொருள் கடத்தி வந்த கார் மோதியதில் இருவருக்கு கால் முறிவு,,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருதாச்சலம் டு சேலம் தேசிய நெடுஞ்சாலை குரால் பிரிவுரோட்டில் வாழப்பாடி பகுதி கோலத்து கோம்பை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை, வேலாயுதம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த குஜராத் பதிவெண்கொண்ட கார் மோதியது. கார் மோதியதில் தங்கதுரை மற்றும் வேலாயுதம் ஆகியோரின் காலில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் மோதிய காரை சம்பவ இடத்தில் நிற்காமல் சேலம் டு […]

திமுக பொறியாளர் அணி துணை தலைவர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து!!

தென்காசிதெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனை  தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை தலைவராக அறிவிக்கப்பட்ட செங்கோட்டை எஸ். இம்ரான்கான் முத்துராமலிங்கம் சந்தித்து கைத்தறி ஆடை, மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அழகு முத்துக்கோன் 266 வது குருபூஜை நலதிட்ட உதவிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் – பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் அழகு. தன் இளம் வயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக இருந்தார். இதனால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து, போராடி வந்தார். ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார் அழகு முத்துகோன். அனைத்து பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலித்த ஆங்கிலேயர்கள், 1755 ஆம் ஆண்டு எட்டயபுரத்திற்கும் வரிகேட்டு ஓலை அனுப்பினர். இதனை எதிர்த்து, ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எட்டயபுர மன்னரிடம் கடுமையாக […]

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2 புதுமுக வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி;

  இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று விட்டது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் […]

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி 15ஆம் தேதி டாஸ்மாக் முன்பு மதுபானப்பாட்டில் உடைப்பு போராட்டம்!

மதுபானப்பாட்டில் உடைப்பு போராட்டம்!      புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021ஆம் ஆண்டு தேர்தலில் அறிவித்தது போல ஆட்சிக்கு வந்த பின்னர் முதலாவது நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தும், இரண்டாவதாக டாஸ்மாக்கை தடை செய்தும், மூன்றாவதாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திலும் கையெழுத்து இடுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு பல்வேறு […]

கனமழை காரணமாக உடைந்தது மேக்கரை குளம் -நேரில் ஆய்வு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரை குளத்தின் கரையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பியதால் திடீரென குளத்தின் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது… அடவிநயினார்கோவில் அணை செல்லும் பிரதான சாலையில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பியது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை சேதமடைந்தது.  இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், […]

இல்லம் தேடி கல்வி மையத்தில் புத்தகத் திருவிழா துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ;

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆறாவது புத்தகத் திருவிழாற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  புதுக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்துகிறது. இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் விழாவில் இந்திய விஞ்ஞானிகள், கவிஞர்கள், விருதுபெற்ற  முன்னணி எழுத்தாளர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாலைநேரங்களில் உரையாற்றுகிறார்கள், அதேபோல […]

சங்கடஹரா சதுர்த்தியினை   முன்னிட்டுஅரசமர பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள்;

தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் அரச மர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்நிலையில சங்கடஹரா சதுர்த்தியினை   முன்னிட்டு இந்த திருக்கோவிலில் அரசமர பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விபூதி ,பால், தயிர், இளநீர், பழங்கள், தேன் ,நெய் ,சந்தனம் ,மஞ்சள், பன்னீர் ,திருமஞ்சல் பொடி, அருகம்புல் பொடி மற்றும் 13 வகையான மங்களகரமான பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையில் பழனிசெட்டிபட்டி ,தேனி உள்ளிட்ட பல்வேறு […]