சேலத்தில் தெய்வீகத் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை மற்றும் அர்த்தநாரீஸ்வர வர்மா கலை இலக்கிய பேரவை இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வர்மா வின் 150 வது பிறந்தநாள் விழா, மற்றும் முப்பெரும் விழா சுகவனேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஸ்ரீதர் நரசிம்மன் வரவேற்புரை ஆற்றினார். சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் முருகேசன் திருக்குறள் முற்றோதலை துவக்கி வைத்தார். தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை நிறுவனர் வீரபத்ரானந்த புரி, […]
அர்த்தநாரீஸ்வரர் வர்மா வின் 150 வது பிறந்தநாள் விழா, மற்றும் முப்பெரும் விழா.,
முதியவரின் அழுகுரல் நிலத்தை மீட்கப் புகார் மனு. அதிகாரிகளின் செவிகளுக்கு எட்டுமா?
தென்காசி மாவட்டம் கருவந்தா ஊராட்சிக்கு உட்பட்ட சோலைச்சேரி கிராமம் அம்பேத்கர் நகர் தெருவைச் சேர்ந்த புதியான்சாம்பான் என்பவருக்கு சொந்தமான 2.64 செண்ட் நிலம் உள்ளது, புதியான்சாம்பான் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு சொந்தமான வீட்டில் அவரது பேரன் துரைராஜ் வயது 85 தனது மனைவி 75 வயதான மேரி புஷ்பத்துடன் வசித்து வருகின்றனர். தள்ளாடும் வயதில் நிம்மதியாக சென்ற முதியவர்களின் வாழ்வில் வீட்டின் அருகே துரைராஜ்க்கு பாத்தியப்பட்ட 1.64 செண்ட் நிலத்தை அருகில் வசித்து வரும்அந்தோணி என்பவர் தனது மனைவி […]
அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சமரத்து கருப்பராயன் திருக்கோவில் திருவிழா.,
கோபிஅருகேஉள்ளபாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சமரத்து கருப்பராயன் திருக்கோவில் திருவிழா மிகசிறப்பான முறையில் நடைபெற்றது.இன்று இரவு 8 மணிக்குமறுபூஜை நடைபெறும்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவில் தலைமை பூசாரி வேங்கை என்.கே.பிரகாஷ்பணிவுடன் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றும் திருவிழாவில் கலந்து சிறப்பித்தஅனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைதெரிவித்துக் கொண்டார்.
சங்கரன்கோவிலில் மின் இணைப்பு பெயர் மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம். தென்காசி மாவட்டத்தில். சங்கரன்கோவில் நகர்புறம் 1 பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரநயினார் திருக்கோவில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆறாம் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்.சார்பாக தென்காசி மாவட்டம் கலைவாணர் கலைக்குழு பொன் ஆனந்தராஜ் தலைமையில் மின்துறை அமைச்சர் அறிவிப்பின்படி மின் இணைப்பு பெயர் மாற்றம் மேளா, மற்றும் மின்சார பாதுகாப்பு , […]
புதிய மாவட்டப் பொறுப்பாளர், நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!
ஜெ. ஆட்சியில் இப்படி செய்ய முடியுமா? என புலம்பும் தொண்டர்கள்: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனுக்கும், அப்போதைய நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.,வுக்கும் பணிப் போர் நடந்ததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கட்சியின் தலைமை வரை புகார் சென்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்ததுடன், மாநகராட்சி அதிகாரிகளும், நெல்லை மாநகரப் பொதுமக்களும் எந்த வேலையும் நடைபெறவில்லையே […]
மணிப்பூரில் பெண்கள் மீது நடைபெறும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்து – தென்காசியில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
-. தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை வகித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மனிப்பூர் மாநில அரசு மற்றும் மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசை […]
முதுகுளத்தூரில் கடைகளில் ஆய்வு 2 வியாபாரிக்கு அபராதம்.
. முதுகுளத்தூர். ஜுலை 27. கமுதி மற்றும் முதுகுளத்தூர் புட் செல் இன்ஸபெக்டர் முத்துச்சாமி தலைமையில் முதுகுளத்தூரில் ஜூஸ் கடை மற்றும் உணவகம் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது பஸ் நிலைய கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு 2 ஆயிரம் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.கடைகளில் உள்ள பொருட்களை பரிசோதனைக்கு அணுப்பி வைத்தனர்.
முட்டையில் நிறைந்துள்ள சத்துக்கள்…
வளரும் குழந்தைகளுக்கு முட்டையை பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு ‘பச்சை முட்டை’ தருவது நல்லது என்றும் கூறுகிறார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.மஞ்சள் கருவில் 100 […]
“காவாலா” இந்தி வெர்ஷனுக்கு தயாராகுங்கள்.. அப்டேட் கொடுத்த ஜெயிலர் படக்குழு..,
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா […]
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து – தென் கொரியாவை வீழ்த்தியது கொலம்பியா.,
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் தென் கொரியா அணிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கால்பந்து மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகள் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.