முதுகுளத்தூர் பேரூராட்சியில்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பு முகம்.,

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மேல முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு முகம் நடைபெற்றது.  இந்த முகாமில் தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன்  திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின் அப்பொழுது துணை வட்டாட்சியர் சிவசங்கர் , வருவாய் ஆய்வாளர் சிங்கமுத்து , கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோருடன் இருந்தனர் .

சத்தான டிபன் கேழ்வரகு தட்டு இட்லி..,

தேவையான பொருட்கள் கேழ்வரகு – 1 கப் இட்லி அரிசி – 1 கப் உளுந்து – அரை கப் வெந்தயம் – 1 டீஸ்பூன் ஜவ்வரிசி – 5 டீஸ்பூன் உப்புபு – தேவையான அளவு  செய்முறை கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும். தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை […]

500சிசி மாடல் விலையை திடீரென மாற்றிய பெனலி- புதிய விலை எவ்வளவு தெரியுமா?

பெனலி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வில் மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களான TRK 502 மற்றும் TRK 502X பாதிக்கப்பட்டு உள்ளன.விலை உயர்வு காரணமாக பெனலி TRK 502 சீரிஸ் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் முந்தைய விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. புதிய […]

சர்வதேச போட்டியில் 76-வது சதம்: வீராட் கோலிக்கு தெண்டுல்கர் பாராட்டு..

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி அபாரமாக விளையாடி செஞ்சுரி அடித்தார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் செஞ்சூரி அடித்தார். 34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனை சமன் செய்தார். பிராட்மேன் 52 டெஸ்டில் 29 செஞ்சுரி அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த […]

ஆடி மாதம் முழுவதும் தினமும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்….

ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால […]

ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா..,

கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 380க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் நிதியுதவியில் ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா  நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரிராஜேந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் எத்திராஜ், சசிகலா, […]

ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் 50வது ஆண்டு ஆடித் திருவிழா

.  ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவில் 50வது ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழா முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆரணி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஆரணி பழைய பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, கோட்டை மைதானம், காவலர் குடியிருப்பு பகுதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் கூழ்வார்த்தல் நடைபெற்றது பக்தர்கள் பொங்கல் வைத்து படையல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு […]

மணிப்பூர் மாநிலத்தின் கொடுஞ்செயலை கண்டித்து அனைத்து இந்திய பத்திரிகைஆசிரியர்& வெளியீட்டாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்  மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்கள், சமூக  ஆர்வலர்கள் கலந்துகொண்டு மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்திய கொடும்பாவிகளையும் பாலியல் வன்புணர்வு செய்த அரக்கர்களையும்  கண்டித்து   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ப.உதயன் ஆ.இளங்கோவன், ஷாஜாகான், பிரகதீஸ்வரன், ஆர்.ரெத்தீஷ் ஆர். சந்திரசேகரன், முத்துச்சாமி, கோபால்,ரமேஷ், முருகன், மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் […]

மாவட்டச் செயலாளர் தலைமையில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் அதிமுக-வில் இணைப்பு!

   திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதி அதிமுக 35ஆவது வட்டச் செயலாளர் இரா.முத்துக்குமார் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை தெற்கு பகுதியில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த 200 இளைஞர்கள் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் கோவிந்தன் வழிகாட்டுதலின் பேரில், அதிமுக நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை. என்.கணேசராஜா தலைமையில் அதிமுக-வில் இணைந்தனர்.     நிகழ்ச்சிக்கு பாளை. பகுதி மாணவர் அணிச் செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

11 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய மற்றொரு சிறுமி; விபரீதமான சிறுமிகள் சண்டை.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வெர்னர் ஆரம்ப நிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகள் சண்டையின்போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயது சிறுமியின் மீது ஆசிட் ஊற்றி உள்ளார். ஜூலை 9ஆம் தேதி  டியரா   சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அந்த அடையாளம் தெரியாத சிறுமிக்கு […]