ஐஐடி மாணவர்களின் பாராட்டு மழையில் மாமன்னன்..,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.ரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இப்படத்தின் வெற்றிக்கு ரெட் ஜெயிண்ட் […]

தேசிய டைவிங்-வாட்டர் போலோ: சென்னை வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்!!!

39-வது சப் ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நடைபெற்ற குரூப் 3 சிறுமியருக்கான 1 மீ. ஸ்பிரிங்போர்டு டைவிங் போட்டியில் சென்னையை சேர்ந்த வீராங்கனை ஆர். ஆராதனா 140.80 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் மத்தியபிரதேச வீராங்கனை அனன்யா யாதவ் 150.55 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார். சிறுவர்கள் பிரிவில் ஆருஷ் […]

தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா;வரும் 26-ந் தேதி தொடங்குகிறது : 

          தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் பெருவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெருவிழா அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.            மேலும், முக்கிய நிகழ்வுகளை கொண்ட ஆண்டுகளில் மட்டும் […]

அஇஅதிமுக கழகத்தின் சார்பில்  விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

வேலூர் மாவட்டம் அஇஅதிமுக கழகத்தின் சார்பில்  விலைவாசி உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் .ஆர். கே. அப்பு தலைமையிலும் ,புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் முன்னிலையிலும், நடைபெற்றது. இதில் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருடு நடைபெற்ற 72 மணி நேரத்தில் குற்றவாளி கைது;-  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி வி சாய் பிரனீத் பாராட்டு .,   

செங்கல்பட்டு மாவட்டம்   மதுராந்தகம் ஜி. எஸ்.டி. சாலையில் உள்ள டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் ஷாப்பில்  நள்ளிரவு சுமார் 01.00 மணி முதல் 03.00 மணி அளவில் கடை இரும்பு சட்டரின் பூட்டை உடைக்கப்பட்டு சுமார் 13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி வி சாய் பிரனீத்  உத்தரவுப்படி மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி அவர்கள் மேற்பார்வையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர்  தர்மலிங்கம்  தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட […]

உரிய நேரத்தில் பேருந்துகள் வராததால்  3 அரசு பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்;-

திருத்தணியில் அண்மைக்காலமாக சரிவர உரிய நேரத்தில் பேருந்துகள் செல்வதில்லை. மேலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்காததால் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படுகறது. இந்நிலையில் திருத்தணி நகராட்சி முருகூர் பகுதியில் காலையில் இருந்து நீண்ட நேரம் எந்த பேருந்துகளும் வராமல் கல்லூரிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து ஆத்திரமடைந்ததால் […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்.,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் டொமினிகாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (20-ந் தேதி ) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 3 […]

கமல், விஜய் சேதுபதியை தொடர்ந்து களத்தில் இறங்கும் கார்த்தி..

.. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‘மார்க் […]

9 வாரங்கள் “ஊஞ்சல் உற்சவம்”

காளிகாம்பாள் திருத்தலத்தில் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் பக்தர்களின் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவது, அம்பாளுக்கு நடத்தப்படும் `ஊஞ்சல் உற்சவம்’ நிகழ்ச்சியாகும். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.இந்த நாட்களில் இரவு 7 மணிக்கு உற்சவர் அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள். உற்சவர் அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும். அப்போது சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு நாம் உற்சவர் அம்பாளை வழிபட்டால், அவள் மனம் மகிழ்ந்து நமது வேண்டுதல்களை எல்லாம் […]

50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று-மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தடை.,

மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கி.மீ.  வேகத்தில் பலத்த காற்று!: ராமேஸ்வரம்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தடைராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பி டி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர் இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கீ. மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.  இதனால் மீன்பிடி அனுமதி சீட்டை ரத்து செய்ததோடு மீனவர்கள் கடலுக்குள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத் தியுள்ளனர்.  மீன்பிடி […]